சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் ஒரு சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து ராஜேஷ் என்பவர் விபச்சாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், சஞ்சீவி (21) என்ற இளைஞரிடம் என்னிடம் அழகான பெண்கள் இருப்பதாகவும் உல்லாசத்திற்கு வருமாறும் அழைத்துள்ளார் ராஜேஷ். இதை சற்றும் எதிர்பாராத சஞ்சீவி, இதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த சொகுசு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அப்பாவி இளம் பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது உறுதியானது. இதனையடுத்து, அங்கிருந்த இரண்டு பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த புரோக்கர் ராஜேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.