fbpx

’ஒவ்வொருத்தர் கூடவும் இத்தன வருஷம் வாழ்ந்து இருக்கேன்’..!! நடிகை ஷகிலா பகீர் தகவல்..!!

சினிமா திரையுலகில் மிகவும் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா. ஆனால், அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை நினைத்து தற்போது வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, எனக்கு கல்யாணம் பண்ண ஆசை இருந்தது. ஆனால், யாரும் எனக்கு செட் ஆகவில்லை என்று ஷகிலா தெரிவித்துள்ளார்.

இவர் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார். அதன்படி, இவர் நடித்த படங்களில் மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என அனைத்தும் இந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை தம்வசப்படுத்திக்க கொண்டார். அத்துடன், இவர் தனது 15-வது வயதில் ‘ப்ளே கேள்ஸ்’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு ஆபாச திரைப்படங்களில் நடித்து மக்களின் வெறுப்பை பெற்றார்

ஆனாலும், இவரது அடையாளத்தையே மாற்றியது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. குறித்த நிகழ்ச்சியினால் புதிய அவதாரம் எடுத்தார் ஷகிலா. இதன் மூலம், தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தன் வசம் கவர்ந்ததோடு, தற்போது பிரபலங்களை வைத்து சிறப்பாக பேட்டி எடுத்து வருகிறார். இந்நிலையில், திருமணம் தொடர்பாக அவர் வழங்கிய பேட்டி ஒன்று பெரிதும் பேசப்படுகிறது.

அவர் கூறுகையில், ‘ஏன்? நா பொம்பள இல்லயா, எனக்கும் ஆசை இருந்தது. ஆனால், யாரும் செட் ஆகல. ஏனென்றால், ஒவ்வொருத்தரையும் நான் துரத்திடுவன். மூனு வருஷம் ஒருத்தன், நாலு வருஷம் ஒருத்தன், ஏழு வருஷம் ஒருத்தன், பத்து வருஷம் என ஒவ்வொருத்தர் கூடவும் இத்தன வருஷம் வாழ்ந்து இருக்கேன். அனைவரும் போனதற்கு காரணம் நான் தான். குடும்பமா வாழ்க்கையானு கேள்வி வந்த போது, நான் என் குடும்பத்த தான் பார்த்தன். என் வாழ்க்கைய பார்க்காம விட்டுட்டன். இதனால தான் இப்போ தனியா இருக்கன்’ என்று பேசியுள்ளார்.

Chella

Next Post

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் புதிய திரைப்படங்கள்..!! நீங்க எந்த படத்துக்கு போவீங்க..?

Thu Nov 9 , 2023
தீபாவளி என்றாலே புது படங்கள் ரிலீஸ் ஆகுவது வழக்கம். எப்போதுமே பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளியின்போது ரிலீஸ் ஆகும். ஆனால், இந்தாண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு இல்லையென்றாலும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கிறது. அப்படி, இந்தாண்டு ரிலீஸ் ஆகவிருக்கும் படங்களின் விவரம் இதோ… ஜப்பான் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஜப்பான். இந்த […]

You May Like