’ நான் தொடர்ந்து போராடுவேன், விலக மாட்டேன்’’ என்று இங்கிலாந்தின் பெண் பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமரான சில காலங்களிலேயே லிஸ்ட்ரசுக்கு எதிராக உள்கட்சியை சேர்ந்தவர்களே கொடி தூக்கியுள்ளனர். பலரும் லிஸ்ட்ரசை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என தெரிவித்து வந்தனர். பொருளாதார விவகாரத்தில் அனைவரின் கருத்தும் லிஸ்ட்ரசுக்கு எதிராக இருந்த நிலையில் தற்போது வாராந்திர நிகழ்ச்சி ஒன்றிற்கு மனம் திறந்து பேசியுள்ளார் லிஸ்ட்ரஸ்.
நிதியமைச்சரை பொருளாதார விவகாரத்தில் பணியில் இருந்து நீக்கினார்.இதனால் லிஸ்ட்ரஸுக்கு ஆதரவாக யாரும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. இந்நிலையில் ’’ நான் செய்ததை போல மாற்றங்களை மேற்கொள்வது சரியான விஷயம் தான். நான் செய்தது சரிதான் , நாள் போராடுபவள் , விலகுபவர் அல்ல.’’ என தெரிவித்தார். ’’ நான் முன்னோக்கி செல்ல தயாராக உள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம் தேதி வரி குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியானது. இது நிதி சந்தையில் பெரும் குழப்பத்தை அளித்தது. கடன் வாங்கும் செலவு கடன் விகிதம் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இங்கிலாந்தில் செலவு நெருக்கடியில் ஏற்கனவே பிரச்சனைகள் உள்ளது. இதனால் இங்கிலாந்து மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என கருத்துக்கள் எழுந்தது.
இருப்பினும் பொருளாதார நடவடிக்கைகளில் நடந்த தவறுகளுக்கு பிரதமர் லிஸ்ட்ரஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதே வேளையில் புதிய நிதி அமைச்சர் லிஸ் உடன் ஆலோசனை செய்த பின்னரே புதிய பட்ஜெட்டை அறிவித்ததாக தெரிவித்தார். இந்நிலையில் இம்மாத இறுதியில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பொருளாதாரத்தை திறம்பட கையாளவில்லை என்பதாலேயே முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போதும் பிரச்சனையை தீர்க்க முடியாமல் திணறி வருகின்றனர். எனவே வரும் 30 ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட்டை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.