fbpx

அதிபரை கொல்வதற்கு கொலையாளியிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன்!. பிலிப்பைன்ஸ் துணை அதிபர் பகிரங்க மிரட்டல்!.

Philippine: எனக்கு எதிரான சதியில் நான் கொல்லப்பட்டால், அதிபர் மார்கோஸை அவரது குடும்பத்துடன் கொலை செய்ய கொலையாளி ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுடெர்டே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை அதிபர் சாரா டுடெர்டே, ‘எனக்கான அவர்களின் சதி வெற்றி பெற்று நான் கொல்லப்பட்டால், அதிபர் மார்கோஸ், அவரது மனைவி மற்றும் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் ஆகியோரை கொல்வதற்காக கொலையாளி ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளேன்”என்றார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அதிபரின் உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் எப்பொழுதும் தீவிரவமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். மேலும் துணை அதிபரின் இந்த அச்சுறுத்தல் தெளிவான மற்றும் குறிப்பிட்ட சொற்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Readmore: திமுக ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு கொடுக்க மாட்டோம்…! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு கருத்து..‌!

English Summary

I have made a contract with an assassin to kill the president!. Philippine vice president publicly threatened!

Kokila

Next Post

Alert...! நாளை தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்...!

Sun Nov 24 , 2024
A low pressure area will form over the central part of the South Bay of Bengal tomorrow.

You May Like