fbpx

’என்கிட்ட பவுடர் தான் இருக்கு பூசிக்கிறீங்களா’..? சோதனை செய்த அதிகாரிகளிடம் கிண்டல் செய்த மன்சூர் அலிகான்..!!

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகானின் காரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், தீவிரமாக பரப்புரை செய்து வருகிறார். இவர், பிரச்சாரம் மேற்கொள்ளும் நேரத்தில் செய்யும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. இந்நிலையில், நேற்று குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மேல்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த மன்சூர் அலிகானின் காரை வழிமறித்த அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது உள்ளே ஏதும் இல்லாததால் கார் பதிவு எண் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் குறித்த விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

அந்த நேரத்தில் மன்சூர் அலிகான் சோதனை செய்த அதிகாரிகளை பார்த்து, உள்ளே முகத்திற்கு பூசிக் கொள்ளும் பவுடர் தான் இருக்கிறது. அதைபூசிக்கொள்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு, அதிகாரிகள் அவரை பார்த்து சிரித்து கடந்துச் சென்றனர்.

Read More : Tasmac | டாஸ்மாக் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு..? 2 மணி நேரம்..!! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து நெருக்கடி… நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஐ.நா.வின் நம்பிக்கை நிறைவேறுமா?...

Fri Mar 29 , 2024
தேர்தலை முன்னிட்டு இந்தியாவில் வாக்காளர்களின் அரசியல் மற்றும் சமூக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக […]

You May Like