fbpx

’எனக்கு அந்த ஃபீலிங் இருக்கு’..!! விஷ்ணுவிடம் காதலை சொன்ன பூர்ணிமா..!!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்பாகவும், சண்டை, சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம். இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக ஐஷூ வெளியேறியிருந்தார். இதையடுத்து, இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த வாரம் பிரதீப் விஷயத்தையும் மாயா, பூர்ணிமா விஷயத்தையும் பெரியளவில் இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், பெண் போட்டியாளர்கள் போல் ஆண்களும், ஆண் போட்டியாளர்கள் போல் பெண்களும் நடித்து வரும் டாஸ்க் நடந்தது. இந்நிலையில் பூர்ணிமா, தன் காதலை விஷ்ணு விஜய்யிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். நான் ஓப்பனா சொல்றேன், எனக்கு அந்த ஃபீலிங் இருக்கு, அப்படி நீங்க பண்றீங்களான்னு கேட்குறேன் என்று போட்டுடைத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் விஷ்ணும் வலையில் மாட்டிக்கிட்டான் என்று கலாய்த்து வருகின்றனர்.

Chella

Next Post

கட்டுப்பாட்டை இழந்து பசிபிக் பெருங்கடலில் விழுந்த சந்திரயான் - 3..!! இஸ்ரோ அறிவிப்பு..!!

Fri Nov 17 , 2023
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் – 3’ விண்கலத்தை ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவியது இஸ்ரோ. இதனையடுத்து, விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. பின்னர் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் நிலவில் பல ஆய்வுகளையும் செய்து தகவல்களை கொடுத்தது. தற்போது […]

You May Like