செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே நல்லம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான சங்கர், தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு தினேஷ் (29) என்ற மகனும், தேவதர்ஷினி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சங்கரின் மனைவி ஒரு தனியார் நிறுவன அடுக்குமாடி குடியிருப்பில் ஹவுஸ்கீப்பிங் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் குமரேசன் என்பவர் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், செல்வராணிக்கும், குமரேசனுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்த நிலையில், அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சங்கருக்கு தெரியவந்த நிலையில், இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து, செல்வராணி குமரேசனுடன் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்ட நிலையில், ஒரு கட்டத்தில் முற்றிலும் அவரது தொடர்பை துண்டித்துவிட்டார். இதனால், குமரேசன் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல கடந்த 3ஆம் தேதி வேலைக்கு சென்ற செல்வராணி, மீண்டும் வீடு திரும்பாததால், அதிர்ச்சி அடைந்த கணவர் சங்கர் மனைவியை காணவில்லை என தாழம்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து, செல்வராணியின் செல்போன் நம்பரை ஆய்வு செய்தபோது, கடைசியாக குமரேசனுடன் பேசியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 4 நாட்களாக குமரேசனும் வேலைக்கு வராதது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், குமரேசனின் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அங்கு பதுங்கியிருந்த குமரேசனை சுற்றி வளைத்து கைது செய்து, தாழம்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில், 32 வயதாகும் குமரேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கிறார். இவர், நல்லம்பாக்கத்தில் தங்கியிருந்து பணிபுரிந்தபோதுதான், செல்வராணியுடன் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.
ஒருகட்டத்தில் திருமணம் கொள்ளுமாறு குமரேசனை செல்வராணி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், பயந்து போன குமரேசன் செல்வராணிக்கு ஃபோன் செய்து, தன்னுடைய மகனுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக பொய் சொல்லி தனது பைக்கில் அவரை ஏற்றிக் கொண்டு ஒத்திவாக்கம் காட்டுப் பகுதிக்கு சென்றார். அங்கு, செல்வராணியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார் குனசேகரன்.
இந்நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், காட்டு பகுதிக்குள் அழுகிய நிலையில் கிடந்த செல்வராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.