குழந்தைகள் முதல் பெரியவர் வரை பார்த்ததும் சிரிக்கும் பாடி லாங்குவேஜ் கொண்டவர் நடிகர் வடிவேலு. சிரிக்க வைப்பதோடு சிந்திக்க வைக்கும் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். அந்த வகையில் மாமன்னன் படத்தின் மூலம் அதனையும் நிரூபித்து விட்டார். மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய “மலையில தான் தீப்பிடிக்கிறது ராசா” எனும் பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 2005 ஆம் ஆண்டு வெளியான “குண்டக்க மண்டக்க” படத்தில் வடிவேலு பாடிய “வந்துட்டான்யா” பாடலும் ஹிட்டான பாடல். இது தொடர்பாக இசையமைப்பாளர் பரத்வாஜ் அளித்த பேட்டியில்,
“இந்த பாட்டிற்கு லிரிக்ஸ் வந்தவுடன், மெட்டு போட்டுவிட்டு, வடிவேலுவை அழைத்தோம். அவர் வந்தவுடன். ஒரு முறை நான் பாடி காட்டினேன். அதை அவர் ரிபீட் செய்தார். முழு பாடலையும் ஒரு முறை அப்படி எடுத்து முடித்தோம். அதன் பிறகு அந்த பாடலை அவர் பாட தயாராகி கொண்டிருந்தார். அதற்குள்ளாகவே, வெறும் 5 நிமிடத்தில், அவர் ரிகர்சலுக்கு பாடியதை வைத்தே எடிட் செய்து, பாடலை ரெடி பண்ணி, அவருக்கு போட்டு காட்டினோம். அதை கேட்டு அவர் அசந்து போய்விட்டார். ஆச்சர்யத்தில் வந்து என் காலில் விழுந்து வணங்கினார். எப்படி நீங்க இப்படி செய்தீர்கள் என்று கேட்டார். அந்த நேரத்தில் தான் எனக்கு அவருடைய பெருந்தன்மை தெரிந்தது. ஒரு பெரிய நடிகர் இப்படி செய்வார் என்று நான் நினைக்கவே இல்லை என்று இசையமைப்பாளர் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.