fbpx

பிரபாகரனை சந்தித்ததே 10 நிமிடம்தான்..!! அப்படினா ஆமைக்கறி, ஏகே 64 எல்லாம் பொய்யா..? சீமானின் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்ட காளியம்மாள்..!!

சமீபத்தில் சென்னை அண்ணாநகரில் நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. அப்போது மேடையில் பேசிய  நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், ‘‘இலங்கைக்கு சீமான் படம் எடுக்கத்தான் சென்றார். ஆனால், சீமான் வெறும் படம் மட்டும் எடுக்க சென்றிருந்தால், தலைவர் பிரபாகரன் தமிழ் தேசிய தலைவராக நமக்குள் புகுத்தப்பட்டிருக்க மாட்டார்.

பிரபாகரனிடம் சீமான் பேசிய 10 நிமிட பேச்சுதான் இவ்வளவு பெரிய மாற்றத்திற்கு காரணம். அதுதான் அவரது அரசியலை நிலைப்பெற செய்யக்கூடிய மையப்புள்ளியாக இருந்திருக்கிறது. ஆனால், அவரது கனவு இன்றளவும் நிலை பெறாமல் உள்ளது’’ என்றார். பிரபாகரனை சந்தித்து அவருடன் ஆமைக்கறி சாப்பிட்டது, ஏ.கே.64 ரக துப்பாக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டது என சீமான் கூறிய கதைகளும் அனைத்தும் பொய் என்பது போல ஒட்டுமொத்த கூட்டத்திற்கு மத்தியில் காளியம்மாள் போட்டு உடைத்து விட்டார்.

இதனால், “சீமான் இவ்வளவு நாள் நம்மிடம் சொன்னது எல்லாம் பொய்யா..? சீமான் அண்ணே நம்மள முடிச்சு விட்டீங்க போங்க” என்பது போல் நாம் தமிழர் தம்பிகள் புலம்பி வருகின்றனர். இந்த கூட்டத்தில் சீமான் பேசுகையில், ”இலங்கைக்கு படம் எடுப்பதற்காக சென்ற குழுவினருடன் நான் சென்றேன். பிரபாகரனிடம் 10 நிமிடம் தான் பேசினேன் என தங்கை காளியம்மாள் கூறுகிறார். என்ன நடந்தது என எனக்கும் தலைவருக்கும் மட்டும்தான் தெரியும்.

பல போராளிகளுக்கு தெரியும், அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் ஒவ்வொருவரும் ஒன்றை சொல்லுகிறார்கள். 10 நிமிடம் பேசியவனிடம்தான் ‘உன்னை நம்பி விட்டு செல்கிறேன்’ என கூறியிருப்பாரா என்ன? அதெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் எல்லா இடத்திலும் சொல்ல முடியாது. இந்த சந்திப்பின் போது கூட எங்களுடைய பணி என்ன என கேட்டேன். அதற்கு அவர், ‘உங்கள் தாயகத்திற்கு போய் இறங்குங்கள். என்ன செய்ய வேண்டும் என உங்களுக்கே தெரிந்து விடும். அதை நீங்கள் செய்யுங்கள்” என்றார். அதேபோல் தாயகத்தில் இறங்கினேன், தெரிந்தது, செய்தேன்” என்று சீமான் கூறியுள்ளார்.

Read More : பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,000 பணமா..? வேட்டி-சேலையும் உண்டு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!!

English Summary

“Is everything Seeman has told us all these days a lie? Seeman, you’ve finished us off, go away,” we Tamil brothers are complaining.

Chella

Next Post

வெங்காயத்த விடுங்க.. 1 கிலோ பூண்டு ரூ.550.. எகிறி அடித்த முருங்கக்காய் விலை..!!

Thu Nov 28 , 2024
It has been reported that the prices of drumsticks and garlic have increased dramatically in Tamil Nadu today.

You May Like