fbpx

’நான் லேகியம் தான் விற்கிறேன்’..!! ’பங்காளி கட்சிகளை ஒழிக்க இதுதான் வழி’..!! அண்ணாமலை ஆவேசம்..!!

பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காக லேகியம் விற்றுக் கொண்டிருக்கின்றேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவள்ளூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை நேற்று மாலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”தமிழ்நாட்டில் லஞ்ச லாவண்யம் இல்லாத சாதி அரசியல், குடும்ப அரசியல் இல்லாத, அடாவடித்தனம் இல்லாத அரசியலை உருவாக்க வேண்டும் என்பதற்காக பாஜக தனித்து நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து பங்காளி கட்சியைச் சேர்ந்த ஒருவர், அண்ணாமலை லேகியம் விற்பதாக கூறுகிறார்.

நான் லேகியம்தான் விற்கிறேன். நம்ம லேகியத்தைப் பயன்படுத்தினால் குடும்ப ஆட்சி இருக்காது, குடும்ப அரசியல் இருக்காது, லஞ்ச லாவண்யம் இருக்காது. தரையில் தவழ வேண்டிய வேலை இல்லாமல் தலை நிமிர்ந்து நின்று நேர்மையாக ஆட்சி செய்ய முடியும். நான் லேகியம் விற்பதே பங்காளி கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இத்தனை ஆண்டு காலம் திராவிடத்திற்கு மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்று நினைத்தோம். அது பாஜக பூர்த்தி செய்யுமா என்ற ஏக்கத்திற்கும், ஆவலுக்கும்.

2024 மக்களவைத் தேர்தல் நிச்சயமாக பதில் சொல்லும். வரும் தேர்தலில் 30 சதவீதம் வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இருந்து பாரத பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வார்கள். காங்கிரஸ் கட்சி ஐசியுவிலிருந்து எழுந்திருப்பதே தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் போதுதான். தமிழ்நாட்டில் தனியாக 12 சீட் ஜெயிப்பார்கள் என்று கே.எஸ்.அழகிரி சொல்கிறார், இந்தியா முழுவதும் நின்றாலும் கூட அவர்களால் 12 சீட்டுகள் ஜெயிக்க முடியாது. சென்னையில் பெருவெள்ளம் தாக்கிய போது ஒரு பிஸ்கட், பால் பாக்கெட் கூட காங்கிரஸால் கொடுக்க முடியவில்லை. அந்த கட்சி இருப்பதே தேர்தலில் நிற்பதற்கும், கூட்டணி பேரம் பேசுவதற்கும் மட்டும்தான்” என்று குற்றம் சாட்டினார்.

Chella

Next Post

"முதலில் தூது.. பிறகு மிரட்டல்.." பாஜகவின் 'பலே' திட்டம்..!! சிக்குவாரா எடப்பாடி.? வேகமெடுக்கும் அரசியல் களம்.!

Sat Feb 10 , 2024
கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரே கூட்டணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக, 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி […]

You May Like