தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகர் பாலா, ”தன்னுடைய உறவுக்கார பெண்ணுடன் தனக்கு எப்படி திருமணம் நடந்தது? மறுமணம் செய்து கொள்ள மனம் மாறியது ஏன்..? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோகிலா என்னை கவனித்து வருகிறார். வீட்டில் 10 பேர் இருக்கிறார்கள் என்றால், வேறு யாரையுமே சாப்பாடு போட விடுவதில்லை. மாமாவுக்கு நான் தான் சாப்பாடு போடுவேன் என்று விழுந்து விழுந்து கவனிப்பார். எப்போதுமே என்கூடவே இருக்கணும்னு சொல்லுவாங்க. இதுதான் எங்களுக்குள் இருந்த தொடர்பு. இந்த ஐலவ்யூ, டார்லிங் இதெல்லாம் என்னிடம் சொன்னதே கிடையாது.
இதனால், கோகிலாவை திருமணம் செய்ய வேண்டுமென நினைத்து மறுநாளே தாலி வாங்க நகைக்கடைக்கு போனேன். அந்த தாலியை வாங்கி, கோகிலாவுக்கு தெரியாமல் கட்டிவிட்டேன். “உனக்காக ஒரு கிப்ட் வாங்கிட்டி வந்திருக்கேன்” எனக்கூறி, சாமி போட்டோ முன்பு வைத்து அவர் கழுத்தில் தாலி கட்டிவிட்டேன். அதன் பிறகுதான், ஜாதகப்படி திருமணம் நடந்தது. வாழ்க்கையில் அன்புதான் முக்கியம் என்பதை உணர்ந்து இவரை திருமணம் செய்து கொண்டேன்.
கடந்தாண்டு எனக்கு ஆபரேஷன் நடந்தபோது, கடவுள் என்னை காப்பாற்றி விட்டார். அந்தசமயம், ஒரு மருந்து எனக்கு தப்பாக தந்துவிட்டார்கள். இது தெரியாமலேயே நான் அந்த மருந்தை தொடர்ந்து சாப்பிட்டேன். பிறகுதான், நான் மீண்டும் 10 நாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அந்த 10 நாளுமே என்னுடைய 2 கைகளிலும் டியூப் போடப்பட்டிருந்தது. அப்போது கோகிலாதான் என்னை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். அன்றைக்குதான் நான் ஒருதாரத்தை பார்த்தேன்.,
என் மனசில் அப்போதுதான் தோன்றியது, இவள் உண்மையிலேயே நம்மை விரும்புகிறாள் என்று. எப்போதுமே நான் அவளை சின்ன பொண்ணு என்றே நினைத்தேன். ஆனால், கோகிலாவுக்கு இருக்கும் முதிர்ச்சி, எனக்கு கூட கிடையாது. இப்போது எங்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகிறது. ஆனால், அதற்கு முன்னாடியே நான் திருட்டுத்தனமாக தாலி கட்டிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
Read More : மகா கும்பமேளா..!! 3 சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்..!! முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா..?