ஃபாக்ஸ் நியூஸின் முன்னாள் தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடன் லாரி சினிகிளேர் (ஆண்) நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ”நானும் ஒபாமாவும் ஒன்றாக சேர்ந்து கோகைன் எனும் போதை பொருளை வாங்கி பயன்படுத்தியுள்ளோம். ஒரு முறை பாருக்கு வெளியே நின்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னிடம் வந்து தன்னை ஒபாமா என அறிமுகம் செய்து கொண்டார். கோகைன் வாங்க நான் அவரிடம் 250 டாலர்களை கொடுத்தேன்.
அவரும் வாங்கி கொடுத்தார். இருவரும் உட்கொண்டோம். பிறகு அவர் ஒரு பைப்பில் போட்டு புகைத்தார். ஆனால், ஒபாமா இல்லினாய்ஸ் மாகாணத்தின் செனட்டர் என்பது எனக்கு அப்போது தெரியாது. போதையில் நாங்கள் ஒன்றாக இருந்த போது என் கையால் அவரது தொடைகளை தேய்த்தேன். என்ன நடக்கிறது என பார்த்தேன். நான் எதற்காக அப்படி செய்தேனோ அது அப்படியே நடந்தது. ஆம்..! அப்போது நாங்கள் இருவரும் பாலியல் உறவு கொண்டோம். இந்த சம்பவம் 1999இல் நடந்தது. இது போல் இரு முறை உறவு வைத்துக் கொண்டோம்” என்றார்.
அப்போது குறிக்கிட்ட தொகுப்பாளர், இரு முறை உறவு கொண்டீர்கள், போதை மருந்தை அவருடன் உட்கொண்டீர்கள். அவர் அதை புகைப்பதையும் பார்த்துள்ளீர்கள். ஆனால், அவர் யாரென்று உங்களுக்கு தெரியாதா? என கேட்டார். ஒரு முறை லிமோ காருக்கு பின்புறமும் இன்னொரு முறை இல்லினாய்ஸில் குர்னீயில் ஒரு ஹோட்டலிலும் உறவு கொண்டோம் என தெரிவித்துள்ளார். எனினும் சின்கிளேர் அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. லாரி சின்கிளேர் ஒரு குற்றப்பின்னணி கொண்டவர்.
இவர் மோசடி, திருட்டு போன்ற குற்றச்சாட்டுகளால் சிறைவாசம் அனுபவித்துள்ளார். 2008இல் அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போதும் ஒபாமா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது சின்கிளேர் ஒபாமா குறித்து குற்றச்சாட்டுகளை முதல் முறையாக வைத்தார். ஆனாலும், அவரால் அதை நிரூபிக்க முடியவில்லை. இவர் இதுபோன்று பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது இருக்கிறது குறிப்பிடத்தக்கது.