fbpx

”இதை நான் அப்போவே சொன்னேன்”..!! ”அவங்க மதிக்கல”..!! I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறியது இதற்கு தான்..!!

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் முயற்சி மேற்கொண்டார். அக்கூட்டணிக்கு ‘இண்டியா’ (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் பேசுகையில், ”எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இண்டியா’ என்ற பெயர் வேண்டாம் வேறு பெயர் வைக்கலாம் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், என்னுடைய கருத்தை காங்கிரஸும் பிற கட்சிகளும் ஏற்கவில்லை. அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி இண்டியா என்ற பெயரை அறிவித்தனர். அத்துடன் கூட்டணியின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இன்று வரை எந்தக் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்படவில்லை. இதனால்தான் அக்கூட்டணியில் இருந்து விலகி, நான் ஏற்கனவே இருந்த கூட்டணியில் இணைந்தேன். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையிலும், பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி உரிமை கோர முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Chella

Next Post

பட்ஜெட் 2024: இடைக்கால பட்ஜெட் எதிரொலி..!! பங்குச்சந்தையில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி.!

Thu Feb 1 , 2024
2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய […]

You May Like