நடிகை சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும், இதில் இருந்து தான் இன்னும் வெளியே வர வில்லை என்று சமந்தா கூறியுள்ளார்.. சமீபத்தில் பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் “ இந்த கடினமான காலங்களில், நான் மிகவும் இருண்ட இடத்தில் இருந்தேன், எனக்கு சில இருண்ட எண்ணங்கள் இருந்தன. இந்த எண்ணங்கள் என்னை அழிக்க விடப் போவதில்லை. அதனால் நான் ஒருபடி மேலே சென்று யோசிக்க வேண்டும்.. பல நெருங்கிய நண்பர்கள் என்னுடன் நின்றனர். நான் இன்னும் அந்த மோசமான நாட்களை கடக்கவில்லை.. ஆனால் மோசமான நாட்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சமந்தா “எனக்கு வேறு வழியில் எதிர்வினையாற்ற தெரியவில்லை. நான் எப்படி எதிர்வினையாற்ற விரும்புகிறேனோ, அதைத்தான் நான் செய்கிறேன். கடினமான தருணங்கள் கடந்து செல்கின்றன என்பதை அறிவது முக்கியம், அவற்றில் நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்..
நட்சத்திர ஜோடியான சமந்தா – நாக சைதன்யா இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.. பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு, இருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர்.. இதை தொடர்ந்து நாக சைதன்யாவிடம் சமந்தா ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கேட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இருப்பினும், இந்த தகவலை சமந்தா மறுத்துவிட்டார். நாக சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இதனிடையே, தனது சாகுந்தலம் பட வெளியீட்டிற்கு சமந்தா தயாராகி வருகிறார். இப்படம் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. இது தவிர விஜய் தேவரகொண்டாவுடன் குஷியும், வருண் தவானுக்கு ஜோடியாக சிட்டாடல் ஆகிய படங்களில் சமந்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.