fbpx

’நான் செத்துப் போய் விடலாமா என்று நினைத்தேன்’..!! ’பிக்பாஸுல இருந்து கூட யாரும் வரல’..!! அனிதா சம்பத் வேதனை..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அனிதா சம்பத், அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே அவருடைய தந்தை இறந்து போயிருந்த வேதனையான தருணத்தை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

அந்த பேட்டியில், ”என்னுடைய அப்பா நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக போறேன் என்று சொன்னபோது சந்தோஷமாக போயிட்டு வா என்று சொன்னார். ஆனால் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால் என்னவென்று தெரியாது. ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு போகிறேன் என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே 80 நாட்களுக்கு மேலே இருந்தேன். அதேபோல 20 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தேன். அதைத்தொடர்ந்து 100 நாட்கள் கழிந்து ஆசையாக என்னுடைய தந்தையை பார்க்கலாம் என்று நான் வீட்டிற்கு வந்த நிலையில், என்னுடைய தந்தை இறந்து போய்விட்டார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நான் இருக்கும் போது என்னுடைய தந்தையை எப்படி வெளிநாட்டிற்கு கூட்டிட்டு போகலாம் என்று நான் ரொம்பவே யோசித்துக் கொண்டு இருந்தேன். ஏன்னா அவர் அந்த மாதிரி இடங்களுக்கு போனதே இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது கூட போட்டியாளர்களிடம் நான் நீங்க வெளிநாட்டுக்கு போயிருக்கீங்களா? அப்போ எவ்வளவு காசு ஆகும் என்ற விவரங்களை அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பேன். அப்போ கூட எனக்கு இதில் கிடைக்கிற சம்பளத்தை வைத்து அம்மாவுக்கு 5 பவுனில் தாலி செயின் எடுத்து கொடுக்கணும். அப்பாவை வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போனும் என்று கனவு கண்டு கொண்டே இருந்தேன்.

ஆனால், வெளிய வந்ததும் என்னுடைய அப்பா இல்லை என்ற வருத்தம் என்னை முடக்கி போட்டு விட்டது. அதோடு பிக்பாஸ் வீட்டிற்குள் 80 நாட்களாக என்னோடு இருந்த சில போட்டியாளர்கள் ஒரு வார்த்தைக்கு கூட எங்க வீட்டுக்கு வந்து என்னிடம் பேசவே இல்லை. எனக்குன்னு ஒரு சின்ன ஆறுதல் கூட சொல்லவே இல்லை. மொத்தம் 4 பேர் மட்டும் தான் எங்க வீட்டுக்கு வந்தாங்க. பிக்பாஸ் முடிந்ததும் எல்லோரும் பப்புக்கு போனாங்க பல பேருடைய ஃபங்ஷனுக்கு போனாங்க. ஆனா என்னுடைய அப்பாவின் இறப்புக்கு யாரும் வரவில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு போகும் போது எங்க அப்பா ரொம்பவும் பெருமையா என்னுடைய பொண்ணு தைரியமா இருக்கான்னு பேசிக்கிட்டு இருந்தாரு.

ஆனா நான் வெளியே வந்து பார்க்கும்போது அவர் உயிரற்ற உடலை தான் பார்த்தேன். அந்த நேரத்திலும் எனக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்து கொண்டிருந்தது. அது என்னை மேலும் வேதனையில் ஆழ்த்தியது. என் கையில் அன்றுதான் போனை கொடுத்தார்கள். அப்பா இறந்த துக்கத்தில் நான் இருக்கிறேன். அந்த நேரத்தில் ஒரு சிலர் எனக்கு போன் பண்ணி கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு பேசலாம் என்று நான் போனை எடுத்தால் அங்கே எனக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் நான் விளையாடியது பிடிக்காமல் பலர் தவறாக கமெண்ட் செய்திருந்தார்கள். அந்த நேரத்தில் நான் செத்துப் போய் விடலாமா? என்று கூட நினைத்தேன் என்று அனிதா சம்பத் கண்ணீரோடு பேசியிருக்கிறார்.

Chella

Next Post

#BREAKING | ”தேர்தல் பத்திரங்கள் செல்லாது”..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Thu Feb 15 , 2024
தேர்தல் பத்திரம் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு “தேர்தல் பத்திரங்கள் செல்லாது” என்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெயர் குறிப்பிடாத தேர்தல் பத்திரங்கள் ஆர்.டி.ஐ. சட்டத்திற்கு எதிரானது. அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறியுள்ளன. தேர்தல் பத்திரங்கள் கைமாறும் ஆதாயங்களுக்கு வழிவகுக்கும். கட்சிகளுக்கு யார் நன்கொடை தருகிறார்கள் என்பதை மக்கள் […]

You May Like