fbpx

’உங்களுக்கு ஒரு டைம் சொன்னா புரியாதா’..? செய்தியாளர்களிடம் டென்ஷனான ரஜினி..!! ஏர்போர்ட்டில் பரபரப்பு..!!

உதயநிதி ஸ்டாலின் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கூலி படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்.

அப்போது, சென்னை விமான நிலையத்துக்கு வந்த ரஜினியிடம், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக உள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘அரசியல் கேள்வி கேட்காதீங்கனு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்’ என்று ரஜினி பதிலளித்தார்.

மேலும், வேட்டையன் திரைப்படம் நன்றாக வந்திருப்பதாகவும், இசைவெளியீட்டு விழாவில் யார் யார் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது குறித்து சரியாக தெரியவில்லை என்றும் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதிலளித்து சென்றார்.

Read More : ’நாங்க மும்பை போலீஸ் பேசுறோம்’..!! மக்களே உஷார்..!! லட்சக்கணக்கில் பணம் பறிபோகும் அபாயம்..!!

English Summary

Actor Rajinikanth gave a bold response to a reporter’s question about Udhayanidhi Stalin.

Chella

Next Post

உங்கள் கை, கால்களில் அடிக்கடி நடுக்கம் ஏற்படுகிறதா? இது தான் காரணம்.. அலட்சியமா இருக்காதீங்க..!!

Fri Sep 20 , 2024
If your hands tremble, then you may be at risk of these diseases, know about them

You May Like