fbpx

’துணிகளை அவிழ்த்து போட்டு நிர்வாணமாக நின்றேன்’..!! ’என்னை கெடுத்துவிட்டார்’..!! இளம்பெண் கதறல்..!!

தேனி மாவட்டம் மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் காமாட்சி (22). இவர், தேனி மாவட்ட காவல் ஆணைய கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தாய்-தந்தையை இழந்த நான் கணவரையும் பிரிந்து வாழ்கிறேன். இப்படி ஆதரவற்ற நிலையில் இருக்கும் நான், கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டடேன். இதற்காக ஜோதிடம் பார்த்து பரிகாரம் செய்தால் சேர்ந்து வாழலாம் என்று என் தோழி கண்மணி ஆலோசனை சொன்னார். இதையடுத்து, நானும் கண்மணியும் அவரின் கணவர் மனோவும் சேர்ந்து ஜோதிடர் செல்வராஜை சந்திக்க சென்றோம். அவர் இப்போது ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜின் தோட்டத்து வீட்டிற்குச் சென்றோம்.

அப்போது, மாந்திரீகம் தாயத்து செய்ய ரூ.20 ஆயிரம் செலவாகும் என்றார். உடனே அந்த பணத்தை கொடுத்தேன். பின்னர் என்னுடன் வந்த கண்மணி, மனோவை வெளியே போக சொல்லிவிட்டு மாந்திரீக தாயத்து கட்ட வேண்டும் என்று தோட்டத்தில் உள்ள குடிசைக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு குடிசைக்குள் சென்றதும் மாந்திரீகம் பலிக்க வேண்டும் என்றால் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றார். நான் அதற்கு தயங்கி வெளியேற நினைத்தபோது நிர்வாண பூஜை செய்ய மறுத்தால் உயிரே போய்விடும் என்று மிரட்டினார். இதனால் பயந்து உடனே என் ஆடைகள் முழுவதையும் அவிழ்த்து போட்டு முழு நிர்வாணமாக நின்றேன்.

அப்போது என்னை அவரது செல்போனில் போட்டோக்கள் எடுத்தார். பிறகு எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்தார். அப்போது நான் கூச்சல் போட்டு வெளியே வந்து விட்டேன். வெளியே வந்து வந்ததும் இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால் மாந்திரிகத்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்” என்று அந்த புகாரில் கூறி இருக்கிறார். மேலும், இது பற்றி போடிநாயக்கனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

Chella

Next Post

”மேனேஜர், தயாரிப்பாளர் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணனும்”..!! நடிகை கல்யாணி ஓபன் டாக்..!!

Sun Mar 12 , 2023
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நடிகை கல்யாணி, ஜெயம் படத்தில் சதாவின் தங்கையாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த இவர், தனது 15-வது வயதில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் சரியாக போகாததால், அண்ணாமலை, பிரிவோம் சந்திப்போம், தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களில் நடித்தார். சினிமா, சீரியல் தொகுப்பாளினி என பிஸியாக இருந்த கல்யாணி, 2014இல் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டு […]

You May Like