fbpx

’அவன நம்பி நடுத்தெருவுல தான் நின்னேன்’..!! ’பணம் கட்ட முடியல’..!! பிக்பாஸ் பாலாஜி வேதனை..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியை நூல் இழையில் தவறவிட்டு 2ஆம் இடத்தை பிடித்தார். அடுத்ததாக அல்டிமேட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் டைட்டில் வின்னரானார் பாலாஜி முருகதாஸ். சிறுவயதில் இருந்தே பெற்றோர் சப்போர்ட் இல்லாமல் தனி ஆளாக தன்னை உருவாக்கிக் கொண்டவர் பாலாஜி.

இந்நிலையில், கிட்டத்தட்ட 10 வருட போராட்டத்திற்கு பின் ‘வா வரலாம் வா’ என்ற படத்தில் ஹீரோவாக அடியெடுத்து வைத்துள்ளார். இவ்வாறான நிலையில், குறித்த படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்து கொண்ட போது, தன் வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், ”என்னுடைய குறிக்கோள் காசு கொடுத்து நடிக்க கூடாது. அதேபோல காசு வாங்காமலும் வேலை செய்யக் கூடாது. இதற்கு பின்னால் என் வாழ்க்கையில் கசப்பான சம்பவமொன்று நடந்தது. என்னுடைய நண்பர் பிரசாந்த் என்பவர் சௌந்தர் என்ற ஒரு இயக்குனர் இருக்கிறார். அவர் ஒரு தயாரிப்பாளரை பிடித்து வைத்திருக்கிறார். அந்த தயாரிப்பாளரிடம் ஷார்ட் ஃபிலிம் எடுத்துக் காட்டினால் அவர் வாய்ப்பு தருவாராம்.

அதனால் அந்த இயக்குனருக்கு பணம் தேவைப்படுவதாக கூறி என்னிடம் பணம் கேட்டார். நானும் சரி நண்பர் கேட்கிறாரே என்று கல்லூரிக்கு கட்ட வேண்டிய பணத்தை எடுத்துக் கொடுத்தேன். அவ்வளவுதான் அடுத்த நாளே நண்பரும் இல்லை, அந்த இயக்குனர் சௌந்தரும் இல்லை. இவ்வாறு இரண்டு பேரும் பணத்தை வாங்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டனர். இதை தொடர்ந்து கல்லூரிக்கு பணம் கட்ட முடியாததால் கல்லூரி படிப்பை டிராப் செய்து விட்டேன்” என கூறியுள்ளார்.

Chella

Next Post

இதுவும் திருட்டுதான்!… அரசு நிலங்களை அபகரிப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பாயும்!… ஐகோர்ட் கிளை அதிரடி!

Mon Nov 27 , 2023
அரசு நிலத்தை அபகரிப்பதும் திருட்டுதான். எனவே அரசு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சேர்ந்த சையது அலி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், எங்கள் பகுதியில் உள்ள பொதுப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட […]

You May Like