fbpx

’உன்ன நம்பி தானடா வந்தேன்’..!! ’3 பேரும் சேர்ந்து அந்த இடத்துல’..!! காதலனால் கதறிய சிறுமி..!!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வேறு வழியில்லாமல் எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், காணாமல் போன மாணவி சென்னை கொருக்குபேட்டையில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார், அங்கு விரைந்து மாணவியை பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி (27) என்பவர் கடத்தி சென்று வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவருடைய நண்பர் ரமேஷ் மற்றும் ராஜபாண்டி இருவரும் சேர்ந்து கொடூரமான முறையில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதையடுத்து, இருவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கைதான ரமேஷ் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர். அவர் ஊர்க்காவல் படையில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால், வெளியில் தான் போலீஸ்காரர் என்று கூறி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

GOOGLE நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம்.!! ஐடி துறையில் 58,000 பேர் வேலை இழப்பு.!! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

Thu Apr 18 , 2024
GOOGLE: உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் தற்போது மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ரூத் போரட் மெமோ மூலம் தெரிவித்திருக்கிறார். ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் கடினமான முடிவுகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நிதி அதிகாரி வெளியிட்ட மெமோ தெரிவித்திருக்கிறது. தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜெயண்ட் கூகுள் […]

You May Like