பாலிவுட் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை மாற்றிய பிளாக்பஸ்டர் ‘பதான்’ படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தனது ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் மற்றொரு படமான ‘ஜவான்’ படத்திற்கு விருந்தளிக்க தயாராகி வருகிறார். முன்னதாக வெளியான போஸ்டர்கள் மற்றும் டீசர்களில் நாம் பார்த்திருந்தாலும், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில், படத்தின் டிரெய்லரை ஷாருக்கான் வெளியிட்டார். இந்த நிகழ்வுக்காக, நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குனர் அட்லீ இருவரும் துபாய்க்கு பறந்தனர். சென்னையில் புதன்கிழமை, ட்ரெய்லர் வெளியிடப்படுவதற்கு முன் ஜவான் படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் படமான இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.