fbpx

’நான் உலக பேமஸ் ஆக வேண்டும்’..!! ’சொல்வதெல்லாம் உண்மை வீடியோவை பரப்புங்கள்’..!! அன்னபூரணி அதிரடி..!!

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சாமியார் அவதாரம் எடுத்திருக்கும் அன்னபூரணி, ”தான் உலக பேமஸ் ஆக வேண்டும் என்பதால் தான் பேசிய சொல்வதெல்லாம் உண்மை வீடியோவை அதிகம் பரப்ப வேண்டும்” என தம்பிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட அன்னபூரணி, கடந்த 2014ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், திடீரென சாமியார் அவதாரம் எடுத்தார். அப்போது முதல் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டும், அதனை கண்டு கொள்ளாமல், தனது சேவையை செய்து வருகிறார். தற்போதைக்கு நித்தியானந்தாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகளவு மக்களால் பேசப்படும் நபராக இருப்பவர் அன்னபூரணி.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில், ”என்னைக் குறித்து சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யும் தம்பிகளே உங்களுக்கு இன்னும் ட்ரெயினிங் பத்தவில்லை. சொல்வதெல்லாம் உண்மை வீடியோவை இன்னும் அதிகமாக பரப்புங்கள். நீங்கள் நினைப்பது போல சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடந்தது சாதாரணம் கிடையாது. அது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. அந்த வீடியோவின் மூலம் தான், நான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளேன். இது இறைவனால் தீர்மானிக்கப்பட்டது.

எனது பக்தர்கள், உங்கள் தைரியம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னார்கள். இந்த வகையில் இன்னும் பலருக்கு நான் தீட்சை வழங்க வேண்டி இருக்கிறது. அதற்காக உலகம் முழுவதும் நான் தெரிய வேண்டும். எனவே அனைவரும் சொல்வதெல்லாம் வீடியோவை பரப்புங்கள்” என பேசியிருக்கிறார்.

Read More : ’உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி’..? ’பாஜகவால் அது முடியவே முடியாது’..!! கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி..!!

English Summary

“Because she wants to become world famous, the truth of what she has said should be spread more widely,” Annapoorani has requested.

Chella

Next Post

ஷாக்..!! இறந்த உடல்களை விற்பனை செய்யும் அதிகாரிகள்.. அம்பலமான உண்மை..!!

Wed Aug 14 , 2024
Massive corruption in funeral services, viral report reveals officers sell thousands of dead bodies

You May Like