கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஷாரோன் ராஜ் என்பவரும் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த கிரீஷ்மா என்பவரும் காதலித்து வந்தனர். கடந்த 2022ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் மாப்பிளை பார்த்துள்ளனர். அதற்கு கிரீஷ்மாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், ஷாரோன் ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
எனவே, ஷாரோன் ராஜை கொலை செய்தால் தான், கல்யாணம் நடக்கும் என்ற நோக்கத்தோடு கடந்த 2022 அக்டோபர் 14ஆம் தேதி ஷாரோன் ராஜை சமாதானம் செய்ய முடிவு செய்வதுபோல அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். தன்னுடைய காதலி அழைத்தவுடன் நம்பி வீட்டிற்கு சென்ற ஷாரோன் ராஜுக்கு குளிர்பானத்தில் கிரீஷ்மா விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த ஷரோன் ராஜ், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, பரிசோதனையில் அவர் விஷயம் அருந்தியது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த வழக்குத் தொடர்பாக கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், இந்த வழக்கில் கிரீஷ்மாவின் தாய் மற்றும் அவருடைய தாய் மாமாவுக்கும் இந்த கொலையில், தொடர்பு இருப்பதாக அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 17) இந்த வழக்கில் நெய்யாட்டின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றவாளி கிரீஷ்மா தான் என தீர்ப்பளித்தது.
அதன்படி, கிரீஷ்மாவும், அவரின் தாய்மாமனும் இந்த வழக்கில் குற்றவாளிகள் எனவும், கிரீஷ்மாவின் தாயார் சிந்துவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் விடுவிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், நீதிபதி ஏ.எம்.பஷீர் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு தண்டனை தொடர்பான வாதங்கள் தொடங்கியது. கிரீஷ்மா காலை 11 மணிக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு நீதிபதி தீர்ப்புக்கு முன் ஏதாவது சொல்ல வேண்டுமா..? என்று கேட்டார். அதற்கு அவர், எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்தார். கிரீஷ்மா, தனக்கு வெறும் 24 வயது தான் ஆகிறது என்றும், கிரிமினல் பின்னணி இல்லாததால், தனது கல்வியைத் தொடர விரும்புவதாகவும் கூறி, அதிகபட்ச மன்னிப்புக்காக முறையிட்டார்.
கிரீஷ்மா ஒரு இளைஞனை கொலை செய்த சாதாரண வழக்கல்ல இது, அன்பான ஒருவரின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து, அவரைக் கொன்றது கொடூரமானது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. கிரீஷ்மா, ஷரோனை பொய்யான காரணம் சொல்லி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். முதல் முயற்சியில் அவரை கொல்ல திட்டமிட்டு, தோல்வியடைந்த பிறகு, கொலையை கவனமாகத் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார். ஷாரோன் இறப்பதற்கு முன் 11 நாட்கள் மிகக் கடுமையான உடல் கோளாறுகளைச் சந்தித்ததாக மருத்துவர்களின் அறிக்கைகள் தெளிவுபடுத்தியுள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஷாரோனை விஷம் கொடுத்து கொன்று, அந்த இளைஞனின் எதிர்காலத்தையும், கனவையும் சிதைத்துவிட்டு, கிரீஷ்மா எந்த வருத்தமும் இன்றி அவரிடம் நாடகமாடியுள்ளார். எனவே, கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு கிரீஷ்மா தரப்பில், கிரீஷ்மா மன உளைச்சலை எதிர்கொண்டு, ஷரோனுடனான தனது உறவை முறித்துக் கொள்ள பலமுறை முயற்சித்தார். ஆனால், அவர் அதற்கு மறுத்து மிரட்டல் விடுத்ததாக வாதத்தை முன்வைத்தனர். ஷரோன் தன்னை மிரட்டுவதற்காக தனிப்பட்ட போட்டோக்களைப் பயன்படுத்தியதாகவும், நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை (ஜனவரி 20) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
Read More : பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஜோராக நடந்த விபச்சார தொழில்..!! திடீரென உள்ளே நுழைந்த போலீஸ்..!! எத்தனை பெண்கள்..?