சீரியல் நடிகையாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். இவர் ஏற்கனவே கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் டிவியில் தெய்வமகள் சீரியலில் நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். அந்த படத்திற்கு பின்னர் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்களாகவே பழகி வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு நடிகையாக தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பேசினார். தேவை இருக்கிறதோ இல்லையோ வேண்டுமென்றே படுக்கையறை காட்சிகளை வைக்கிறார்கள். உங்களுக்கும் இதுபோல அனுபவம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘செங்கலம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாக கதை கூறினார்கள்.
அப்போது, என்னிடம் எதுவும் கூறாமல் படப்பிடிப்பில் படுக்கை அறை காட்சி இருக்கிறது என்று சொன்னார்கள். நான் யோசித்து கதைக்கும் இந்த காட்சிக்கும் சம்பந்தமே கிடையாது. அது இல்லாமல் இருந்தாலும் சிறப்பாக இருக்கும். வம்படியாக ஏன் மசாலாவை சேர்க்குறீங்க என்று தயாரிப்பு நிறுவனத்திடமே கேட்டதால் அந்த காட்சி இல்லாமல் படபிடிப்பு நடந்தது. பணம் முக்கியமில்ல.. கேரக்டர் தான் வேணும் என நடிகை வாணி போஜன் தெரிவித்திருக்கிறார்.