fbpx

Walking போயிருந்தேன்..!! நண்பர்கள் சொன்னதும் Taxi பிடிச்சு வந்துட்டேன்..!! அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி..!!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில் தற்போது செந்தில் பாலாஜியின் இல்லங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த திடீர் சோதனை குறித்து தனக்குத் தகவல் எதுவும் வழங்கப்படவில்லை. சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது எதுவும் கூற இயலாது. பொறுத்திருந்து பார்ப்போம்” என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மனைவியுடன் உல்லாசம்…..! எவ்வளவு சொல்லியும் கேட்காத நண்பனை ஓட ஓட வெட்டி கொலை செய்த கணவர்……!

Tue Jun 13 , 2023
சென்னை பல்லவன் சாலை காந்தி நகரை சேர்ந்தவர் பவுல்ராஜ்( 23). பிரபல ரவுடியான இவர் மீது அடிதடி, போக்சோ போன்ற பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது. அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லோகேஷ்( 26) என்பவருடன் பவுல்ராஜ் நண்பராக பழகி வந்துள்ளார். இதனால் லோகேஷ் வீட்டிற்கு பவுல்ராஜ் அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது லோகேஷ் மனைவி சத்யாவுக்கும், பவுல்ராஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த […]

You May Like