fbpx

’’உள்ளாடை வாங்கத்தான் நான் டெல்லிக்கு சென்றேன்’’ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்தின் சகோதர் சர்ச்சை பதில் ….

ஜார்கண்ட முதல்வர் ஹேமந்தின் சகோதரும் எம்.எல்.ஏ.வுமான பசந்த்சோரன் டெல்லிக்கு உள்ளாடைதான் வாங்க சென்றேன் என சர்ச்சைக்குரிய பதிலளித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவையில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து தனது கட்சிக்காரர்கள் , கூட்டணிக்கட்சிக்காரர்களின் ஒட்டு மொத்த வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதலமைச்சர்பதவியை தொடர்கின்றார். இந்நிலையில் அவரது சகோதரர் பசந்த் சோரன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ-வும், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதருமான பசந்த் சோரன் , ’’  என்னிடம் உள்ளாடைகள் தீர்ந்துவிட்டது. எனவே உள்ளாடைகளை வாங்கி வருவதற்காகத்தான் நான் டெல்லிக்கு சென்றேன். டெல்லியில் நான் உள்ளாடைகளை வாங்கிவிட்டு தற்போது ஜார்கண்ட் திரும்பி உள்ளேன்.’’ என்றார்.

ஹேமந்த் சோரனின் சர்ச்சைக்குரிய இந்த பதிலால் அனைத்துக் கட்சியை சேர்ந்த தலைவர்களும் கடுமையாகவிமர்சித்துள்ளனர். இது குறித்து மக்களவை உறுப்பினர் நிஷிகாந்த் துபே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது.. ’’ ஏழைகள் மற்றும்பழங்குடியினரின் தலைவரான சிபு சோரன் , அவர்தான் குருஜி .. அவரது மகன் உள்ளாடை வாங்க டெல்லிக்கு வருகின்றாரா ? ஜார்கண்ட்டில் நடந்த கொடூரமான கொலை , அங்கிதா என்ற பழங்குடியின பெண் தீ வைத்து கொலை செய்யப்பட்டார் . இந்த சம்பவத்தின் போதும் அவர் மௌனமாக இருந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தினரும் சுதந்திரமாக செயல்படமுடியவில்லை . என தெரிவித்துள்ளார்.

Next Post

நாய் கடிக்கு தடுப்பூசி போட்ட பிறகும் மரணம்..! மத்திய அரசுக்கு அவசர கடிதம்..! மக்கள் பீதி

Thu Sep 8 , 2022
கேரளாவில், கடந்த சில நாட்களில் மட்டும் 5 நபர்கள் நாய் கடித்ததாக மருத்துவமனைக்கு சென்று, தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி என்ற பகுதியைச் சேர்ந்த சிறுமியை, ஆகஸ்ட் 14ஆம் தேதி தெருநாய் ஒன்று பலமுறை கடித்துள்ளது. இதில் முகம் மற்றும் கண்களில் சிறுமிக்குக் காயம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. 3 தவணைகள் தடுப்பூசி செலுத்திய […]
தெரு நாய்களிடம் சிக்கிக்கொண்ட பச்சிளம் குழந்தை..!! கடித்துக் குதறியதால் பரபரப்பு..!! கேரளாவில் அதிர்ச்சி..!!

You May Like