fbpx

நான் என்றுமே தோனியின் ரசிகனாக இருப்பேன்!… சாத்தான்கள்தான் அவரை வெறுக்கும்!… ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

நான் எப்போதும் தோனியின் ரசிகனாக இருப்பேன், அவரை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும் எனவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு 16-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, நேற்று மாலை முதல் குவாலிபையர் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், 15 ரன்கள் வித்தியாசத்தில் முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. கடந்த சீசனில் இருந்து இதுவரை குஜராத்துடன் மோதிய 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது

முன்னதாக தல தோனி குறித்து ஹர்திக் பாண்டியா பேசும் வீடியோ ஒன்றை குஜராத் டைட்டன்ஸ் அணியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹர்திக் பாண்டியா, பெரும்பாலானவர்கள் எம்எஸ் தோனியை மிகவும் சீரியஸான நபர் என நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நான் அவரிடம் ஜாலியாக காமெடி சொல்லி, விளையாடுவேன். மேலும், அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

அது அனைத்தும் நேர்மறையானவை. அவருடன் நிறைய உரையாடியதை விட, வெறுமனே அவரை பார்த்து மட்டுமே நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அவர் எனக்கு நல்ல நண்பர், சகோதரர். நான் எப்போதும் தோனி ரசிகனாக இருப்பேன், அவரை சாத்தான்களால் மட்டுமே வெறுக்க முடியும் எனவும் பாண்டியா தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா மற்றும் தோனி இடையிலான பிணைப்பு குறித்து சொல்லவே வேண்டாம். அதனை பலமுறை களத்தில் நாம் நேரடியாக பார்த்துள்ளோம். இந்த சூழலில் ஹர்திக், தோனி குறித்த தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். மேலும் குஜராத் அணி ட்விட்டரில் Captain, Leader, Legend, எம்எஸ் தோனி ஒரு emotion என்று பதிவிட்டுள்ளது.

Kokila

Next Post

மாத்தி மாத்தி ட்விஸ்ட்!... இந்த விஷியத்துல தோனிக்கு நிகர் அவரேதான்!... பைனலில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்!... ஹர்திக் ஓபன் டாக்!

Wed May 24 , 2023
பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவதில் தோனிக்கு நிகர் அவர் தான், அவரை போன்று பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது கடினம் எனவும் இறுதி போட்டியில் மீண்டும் அவரை சந்திக்க விரும்புகிறேன்” என்றும் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 70 போட்டிகள் கொண்ட 16வது ஐபிஎல் தொடரின் லீக் […]
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணைக் கேப்டனாகிறார் ஹர்த்திக் பாண்ட்யா..?

You May Like