கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி, தனது ஆண் நண்பர் செல்போன் வாங்கித் தருவதாக கூறியதால், அவர் சொன்ன இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் இருசக்கர வாகனத்தில் சிறுமியை ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது நண்பர்களும் காத்திருந்தனர். பின்னர், சிறுமி அங்கு சென்றதும் அவரை மிரட்டி 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதை அவர்கள் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை காட்டி மிரட்டி ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். நடந்ததை வெளியே சொன்னால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர்.
இருப்பினும், வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்துபோன பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பலாத்காரம் செய்த 4 பேரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி நான்கு பேரையும் அடையாளம் காட்டி இருக்கிறார். இதை அடுத்து 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.