சீமானை எதிர்த்து தனியாக போட்டியிடுவேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ”நாம் தமிழர் கட்சியில் வெளியேறியவர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அண்ணன் சீமான் அவர்கள் நல்லவர், நல்ல நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்துள்ளார். அவரு தனியாக இருப்பேன், கூட்டணி வைக்க மாட்டேன் என்கிறார். அவரு தனியாகவே சோறு மட்டும் சாப்பிடுவேன் என்று பார்க்கிறார். சோறு மட்டும் சாப்பிட முடியாது. நமக்கு கூட்டு, தயிர், குழம்பு, சாம்பார், உப்பு, ரசம் என இதெல்லாம் வேண்டும். அதனால் எங்கள் சித்தாந்தம் வேறு. அண்ணனுக்கு வாழ்த்துக்கள். ஏன்னா அவரு தனியா நிற்கும் பட்சத்தில் நாங்க அவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டியது வரும்.
I.N.D.I.A கூட்டணிக்கு போகலாமா ? வேண்டாமா ? என இனிமேல் தான் நாங்க முடிவு பண்ணுவோம். பொதுக்கூட்டம் அடுத்த மாதம் பல்லாவரத்தில் நடக்க இருக்கிறது. தொடர்ந்து கலந்து ஆலோசனைகள் யாருக்கு என்ன ? என்பதை இப்பொழுது நாங்கள் வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார்.