fbpx

”உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்”..!! 2-வது திருமணத்திற்கு பிளான்..!! எஸ்.ஐ. வேடம் போட்ட பெண் சிக்கியது எப்படி..?

வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், சிவாவின் தாயாரோ தன் மகனை பெண் போலீசாருக்குத் தான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியுள்ளார்.

இதனால் தனது காதலி அபி பிரபாவிடம், போலீஸ் எஸ்.ஐ. போன்று வேடம் அணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார். காதலனின் பேச்சைக் கேட்டு அபி பிரபாவும் வாடகைக்கு போலீசார் அணிவதைப் போன்று உடை வாங்கிக் கொண்டு எஸ்.ஐ. கெட்டப்பில் சிவாவின் தாயாரை சந்திக்க வந்துள்ளார். பணி குறித்து சிவாவின் தாயார் கேட்ட போது, அபி பிரபா தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் ஊர் முழுக்க பரவிய நிலையில், வடசேரி போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதலர்கள் தங்களது திருமணத்தை உறுதி செய்துக் கொள்வதற்காக திட்டமிட்டு இப்படி போலியாக போலீஸ் எஸ்.ஐ. போன்று இளம்பெண் வேடம் அணிந்தது தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ., போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும், திட்டம் வகுத்துக் கொடுத்த அவரது காதலனையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த அபி பிரபா..?

தேனி மாவட்டம் வடுகப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அபி பிரபா (34). இவரது கணவர் முருகன். இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு மகன் உள்ளான். குடும்ப தகராறு காரணமாக அபி பிரபா, கடந்த 6 வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்தார். சில காலம் ஊரில் தனியாக வசித்து வந்த இவர், பின்னர் வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள ஜவுளி கடைகளில் சேலைகள் விற்பனை பிரிவில் மேற்பார்வையாளராக பணியாற்றினார். அப்போது அங்கு ஊழியராக வேலை பார்த்து வந்த பிரித்விராஜ் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. 3 மாதங்களுக்கு முன், இவர்கள் திருவனந்தபுரத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்றனர். அப்போது தான் சிவாவுடன் பழக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : ”காரை கையால் கழுவக் கூடாது, நிர்வாணமாக டிரைவ் செய்யலாம்”..!! வியக்க வைக்கும் போக்குவரத்து விதிமுறைகள்..!! எங்கு தெரியுமா..?

English Summary

The police arrested a young woman who disguised herself as a police sub-inspector for grabbing her boyfriend in Vadaseri.

Chella

Next Post

ஆசையாக தல தீபாவளி கொண்டாட வந்த புதுமணப்பெண்..!! ஓட ஓட விரட்டி படுகொலை..!! தூத்துக்குடியில் அதிர்ச்சி..!!

Sat Nov 2 , 2024
The incident of stabbing a newlywed bride who had come for Thalai Diwali in Udengudi has caused great shock and sadness.

You May Like