fbpx

விஜய் டிவி, கமல்ஹாசன் மீது கேஸ் போடுவேன்..!! மகளுக்காக களத்தில் இறங்கிய வனிதா விஜயகுமார்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்கு பிறகு தினம் நடக்கும் பிரச்சனைகள் அவரை சுற்றி தான் நடந்து வருகிறது. இந்நிலையில், நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய பிக்பாஸ் ரிவியூவில் தன்னுடைய மகளுக்காக சொல்லி இருக்கும் விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது பிரதீப் வெளியேற்றப்படும் போது ஒரு சில போட்டியாளர்கள் பிரதீப்க்கு எதிராக பிளான் போட்டு அவரைப் பற்றி தவறாக கருத்து கூறியிருந்ததாக இப்போது பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தன்னுடைய மகள் சொல்லாத வார்த்தைகளை சிலர் வெளியே சொல்லுகின்றனர். அதனால் அதற்கான ஆதாரத்தை தர வேண்டும் இல்லை என்றால் பிக்பாஸ் மீதும் கமல் மீதும் கேஸ் போடுவேன் என்று வனிதா பேசியிருக்கிறார்.

கடந்த வார இறுதியில் பிரதீப் ஆண்டனியால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. இதற்கு உள்ளே இருக்கும் சில போட்டியாளர்கள் பிரதீப் மீது தவறான குற்றசாட்டுகளை வைத்து அவரை வேண்டுமென்றே பிளான் போட்டு வெளியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்த விவாதம் தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளும், வெளியேவும் அதிகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று நடந்த ஸ்டேட்மெண்ட் டாஸ்க்கில் மீண்டும் இந்த விஷயம் குறித்து பேசப்பட்டது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கும்போது பெண்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று நாங்கள் பேசவில்லை. கமல் சார் தான் பிரதீப்பால் எங்களுக்கு நடந்த நிகழ்வுகளை சொன்னதும் Women Card வைத்து அந்த ரெட் கார்டு கொடுத்தார் என்று கூறியிருந்தனர். இதனால் இந்த வீடியோவை சிலர் எடிட் செய்து கமலை டேக் பண்ணி உங்களையே மாட்டி விட்டுட்டாங்க. இவங்களுக்கா நீங்க சப்போர்ட் பண்ணுனீங்க? என்று கமெண்ட் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரிவ்யூ செய்து வரும் நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் சில விஷயங்களை பேசி இருக்கிறார். தற்போது அது சர்ச்சையாகி வருகிறது. அதில் என்னுடைய பொண்ணு உமன் குறித்து எதுவுமே பேசவில்லை. ஆரம்பத்தில் இருந்து பிரதீப்புக்கும் என்னுடைய பொண்ணுக்கும் இடையில் ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது.

அன்று பிரதீப்பு பற்றி எல்லோரும் தங்களுடைய கருத்தை சொல்லிக் கொண்டிருக்கும் போது என்னுடைய மகளும் சொன்னால், அவ்வளவுதான். ஆனால் அவள் பிளான் போட்டு பிரதீப்பை வெளியேற்றி விட்டதாக சிலர் வீடியோ பரப்பி வருகின்றனர். அதனால் என் பொண்ணு பெயரை சேர்த்து கெடுப்பது போல இந்த ரெட் கார்ட் இருப்பதால் கமல் மற்றும் விஜய் தொலைக்காட்சி மீது அவதூறு வழக்கு போடுவேன். இந்த வாரம் இந்த பிரச்சனை குறித்து கமல் பேசியாக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். என்னுடைய பெண்ணின் பெயர் இந்த பிரச்சனையில் அதிகமாக அடிபடுகிறது. அவளுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று வனிதா பேசியிருக்கிறார்.

இப்படியாக இருக்கும் நிலையில், இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் ஜோவிகா கடந்த சனிக்கிழமை கமல் முன்பு பிரதீப் குறித்து பேசுவதற்காக செங்கொடியை தூக்கி இருந்த நிலையில், அப்போது இரவு தூங்குவதற்கு பெண்களுக்கு பயமாக இருக்கிறது என்றும் பிரதீப் தூங்காமல் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று புகார் அளித்திருந்தார். ஆனால், அது உங்களுக்கு மறந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Chella

Next Post

கடலுக்கு அடியில் வெடித்த எரிமலை..!! ஜப்பானில் உருவான புதிய தீவு..!!

Thu Nov 9 , 2023
ஜப்பானில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்ததன் விளைவாக, கடற்பரப்பில் புதிதாக தீவு ஒன்று உருவாகியுள்ளது. தெற்கு ஜப்பானில் ஐவோ ஜிமா தீவுக்கு ஒரு கிமீ தூரத்தில் உள்ள பெயரிடப்படாத எரிமலை ஒன்று 3 வாரங்களுக்கு முன்னர் வெடிக்கத் தொடங்கியது. இந்த வெடிப்பு தொடங்கிய 10 நாட்களுக்குள், எரிமலையில் இருந்து கிளம்பிய சாம்பலும் பாறைகளும், ஆழமில்லாத கடற்பரப்பில் குவிந்து, அதன் முனை கடலுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது, புதிய தீவு […]

You May Like