fbpx

”நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்”..!! ”இப்போ என் வீட்டுக்கு வா”..!! மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உமையாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் இளங்கோ வயது (21). இவர், செய்யார் பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவியை இளங்கோ காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி பள்ளிக்கு சென்று வரும் போதெல்லாம் மாணவியை பின்தொடர்ந்தது சென்று வந்துள்ளார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. மாணவி பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் மாணவியை கட்டிப்பிடித்துள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர்கள் இருவரையும் கண்டித்து அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இளங்கோ மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி தனிமையில் சந்தித்து வந்துள்ளார். பிறகு விடுமுறை நாட்களில் இளங்கோ மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து மாணவிக்கு சில நாட்கள் கழித்து உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக காணப்பட்டார். பிறகு மாணவியை பெற்றோர் செய்யாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கர்ப்பமாகி உள்ளது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது, நடந்ததை கூறினார். இதுகுறித்து உடனடியாக பெற்றோர் செய்யார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தலைமறைவான இளங்கோவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த 1 வயது பிஞ்சு! காவல்துறை தீவிர விசாரணை!

Fri Mar 17 , 2023
பெற்றோர்களின் கவனக்குறைவால் ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியை அடுத்த வெங்கட்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி விவசாயி இவரது மனைவி சுபித்ரா. இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள். மூன்றாவது குழந்தையின் பெயர் கௌஷிக் வயது ஒன்று. கோபியும் அவரது மனைவியும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவனும் மனைவியும் […]

You May Like