மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.. இதையடுத்து ராகுல்காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.. இதை தொடர்ந்து சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணை முடியும் வரை ராகுல்காந்திக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனை நிலுவையில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.. இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் அன்றைய தினம் ராகுல்காந்தி ஆஜராக தேவையில்லை என்றும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்..
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல்காந்தி இன்று முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு சென்றார்.. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ பாஜகவுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டேன்.. எனக்கு எதிராக எது நடந்தாலும், நான் நானாகவே இருப்பேன்.. எம்பி என்பது வெறும் பதவி மட்டுமே.. பாஜக எனது பதவி, வீடு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம் அல்லது சிறையில் அடைக்கலாம், ஆனால் வயநாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை அவர்களால் தடுக்க முடியாது.
பா.ஜ.க அமைச்சர்கள், பாராளுமன்றத்தில், என்னைப் பற்றி பொய் கூறி, என்னை பேச அனுமதிக்கவில்லை. நானும் சபாநாயகரிடம் சென்றேன், ஆனால் இன்னும், என்னை பேச அனுமதிக்கவில்லை…அவர்கள் என்னை எவ்வளவு தாக்குவார்களோ, அவ்வளவு அதிகமாக நான் அதையே பேசுவேன்… ஆனால் நான் நிறுத்த மாட்டேன். இந்த தகுதி நீக்கம் வயநாடு மக்களுடனான எனது உறவை மேலும் ஆழப்படுத்தும்..” என்று தெரிவித்தார்..