fbpx

’அக்காவ அடிக்க விடமாட்டேன்’…!! நாயின் பாசம் – வீடியோ வைரல்..!

நன்றிக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரு உயிர் என்றால், வரும் முதல் வார்த்தை நாய்தான். வளர்ப்பு பிராணிகள் பட்டியலில் மனிதனிடம் அதிகம் நெருங்கியது நாய் தான். இத்தனை பெருமைகளை கொண்ட நாய்களை பெரும் செல்வந்தர்கள் தொடங்கி யாசகம் பெறுபவர்கள் வரை வளர்க்கின்றனர். அன்பு காட்டினால் போதும் அனைவரிடத்திலும் அளக்காமல் அன்பை அள்ளித் தரும் பிராணி எனலாம். இந்த நிலையில், சிறுமியின் தாயிடம் இருந்து, பாதுகாப்பதற்காக அந்த வீட்டில் வளர்ர்கப்படும் செல்ல பிராணி போராடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வீடியோவில், சிறுமி தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சிறுமியின் தாயார் அடிக்க கையை ஓங்குகிறார். இதனை கவனித்து விட்ட நாய் ஓடி வந்து, சிறுமியை அடிக்க விடாமல் தடுக்க முயல்கிறது. பின்பு, பெண்ணை நோக்கி குரைக்கிறது. சிறுமியை அடிவாங்காமல் தடுக்க அந்த செல்லப்பிராணி படும் பாட்டை வீடியோவாக எடுத்த அந்த வீட்டின் உரிமையாளார் அதனை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செல்லப்பிராணிகளின் பெயர்கள் நம் வீடுகளின் ரேஷன் கார்டில் இல்லை என்றாலும் அவை நம்மில் ஒருவராக இருக்கத்தான் விரும்புகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த வீடியோ. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்வது மட்டுமல்லாமல், நாயின் பாசம் குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

வீடியோவை காண: https://www.instagram.com/reel/ClgVTBgLhqE/?utm_source=ig_web_button_share_sheet

Kokila

Next Post

இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு விலக்கு!!! ஜே.இ.இ தேர்வு - தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றது தேசிய தேர்வு முகமை..!

Sat Dec 24 , 2022
ஜே.இ.இ தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை தமிழக மாணவர்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கொரோனா பரவிய காலகட்டத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை ஜே.இ.இ தேர்வில் […]

You May Like