fbpx

’எல்லாத்தையும் சோசியல் மீடியாவுல போட்ருவேன்’..!! நடிகை ரச்சிதாவை மிரட்டிய தயாரிப்பாளர்..!!

பிக்பாஸ் பிரபலம் ரச்சிதாவை மிரட்டும் வகையில் தயாரிப்பாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் எல்லாவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.எஸ்.கே.சதீஷ் இயக்கத்தில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி நடித்துள்ள ‘ஃபயர்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்த சில சர்ச்சையான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக, ரச்சிதாவின் பிறந்தநாளில் ரச்சிதா மிகவும் கிளாமராக நடித்துள்ள படத்தின் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரச்சிதா தனது சமூக வலைதளத்தில் ‘ஒரு படத்தின் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கலாம், அதற்காக எதையும் செய்யலாம் என்று நினைக்காதீர்கள், தன்வினை தன்னைச்சுடும் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ், நீங்க நடிச்சததான் உங்க birthday க்கு… Glimpse போட்டிருக்கேன். நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடல, இன்னும் படம் வெளியில வரும்போது… நீங்க நடித்த காட்சிகள் எல்லாமே வெளியில வரும்.

நீங்க சம்பளம் வாங்கிட்டுதான் நடிச்சிருக்கீங்க இனாமா நடிச்சு கொடுக்கல. அதுக்கு அக்ரிமெண்ட் என்கைல இருக்கு. நீங்க பணம் வாங்கினதுக்கு ஆதாரமும் என் கைல இருக்கு. அதனால், உங்கள நீங்களே தாழ்திக்காதீங்க. தேவைப்பட்டால் எல்லாத்தையும் நான் சோசியல் மீடியாவுல போடுற மாதிரி ஆயிரும் என மிரட்டும் தொணியில் பதிவிட்டுள்ளார்.

Read More : ரூ.1,000 உரிமைத்தொகை..!! வெளியான செம குட் நியூஸ்..!! பெண்களே நாளைக்கு வங்கிக் கணக்கை செக் பண்ணுங்க..!!

English Summary

Bigg Boss celebrity Rachita has created a sensation when a producer posted on his social media that he will publish everything on social media to threaten her.

Chella

Next Post

இரவு சாப்பிட்ட பின் இந்த விஷயத்தை பண்ணுங்க..!! இத்தனை நன்மைகளா..?

Sun Jul 14 , 2024
Exercise is very important for the body. Adequate exercise is essential to keep the bones and muscles in the body healthy.

You May Like