fbpx

’அவருடன் துணை நிற்பேன்’..!! விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் பிரபல நடிகர்..!!

நடிகர் விஜய், தமிழ் சினிமா பெருமையாக கொண்டாடும் ஒரு பிரபலம். இவர் படம் வந்தாலே திரையரங்குகள் திருவிழா கோலமாக இருக்கும். கடைசியாக இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி இருந்தது. அப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், விஜய் சூப்பராக வெற்றிவிழா ஏற்பாடு செய்து கொண்டாடினார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68-வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு கோட் என பெயர் வைத்துள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடக்கும் என கூறப்படுகிறது. விஜய் அண்மையில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டார். தான் அரசியலுக்கு வருவதாகவும், கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சமுத்திரக்கனி கூறுகையில், ”விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், தேவைப்பட்டால் அவருடன் துணை நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

’இப்படியே போச்சுனா ஒருத்தரும் இருக்க மாட்டாங்க போல’..!! அதிமுகவில் இணைந்த மநீம மாநில செயலாளர்..!! அதிர்ச்சியில் கமல்..!!

Fri Feb 16 , 2024
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறுவது ஒரு பக்கமும், சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இணையும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு சில கட்சிக்கும் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இணையும் செய்தி அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை […]

You May Like