fbpx

“என் அம்மாவிடம் சொல்லி தான் கலைஞரிடம் சொல்ல சொல்லுவேன்” உணர்ச்சி வசப்பட்ட முதல்வர் ஸ்டாலின்..!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விழாவில், தாய், மனைவி, மகள் ஆகியோரை நினைவுகூர்ந்து உணர்ச்சி வசப்பட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்.

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்று சிலர் கூறினார்கள். பொய் வதந்தி பரப்பி சிலர் திட்டத்தை முடக்க நினைத்தனர். அறிவித்து விட்டால் அந்த திட்டத்தை நிறைவேற்றி காட்டுபவன் நான்.

நிதிநிலை சரியில்லாத காரணத்தினாலேயே ஆட்சிக்கு வந்த உடன் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது நிதி நிலை சீராகி விட்டதால், 1,000 ரூபாய் மகளிருக்கு வழங்கப்படுகிறது. மதத்தின் பெயரால் பழமையின் பெயராலும் பெண்கள் வீட்டிற்குள் முடக்கப்பட்டனர். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று கல்வி மறுக்கப்பட்டது. சிறுமிகள் திருமணத்தை தடுத்த திராவிட இயக்கத்தின் மீது சிலருக்கு கோபம் உள்ளது.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், “உங்க மனைவிக்கு வேலைக்கு போகவில்லையா என்று கேட்டால் இல்லை என்று மட்டும் சொல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறாங்க என்று சொல்லுவார்கள், பெண்களால் வீட்டில் சும்மா இருக்க முடியுமா என்று கேட்டார். மகளிருக்கான உரிமையி கொடுக்கவும் அவர்களின் வேலையை அங்கீகரிக்கவும் துவக்கிய திட்டம் தான் இந்த கலைஞரின் மகளிர் உரிமை திட்டம்” என்று கூறினார் முதலவர் ஸ்டாலின்.

மேலும் பேசிய அவர் தாயின் கருணை, மனைவியின் உறுதுணை, மகளின் பேரன்பு, இவையெல்லாம் ஒருத்தருக்கு கிடைத்தால் அதைவிட வேறு செல்வம் தேவையில்லை என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் அவருடைய தாய் தயாளு அம்மாள், மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகள் செந்தாமரை ஆகியோரை நினைவு கூர்ந்தார்.

அப்போது பேசிய அவர் தன்னுடைய தாய் தயாளு அம்மாள் கருணையே வடிவானவர், சிறு வயதில் என்னுடைய நிகழ்ச்சி எதாவது நடைபெறும் நேரத்தில் மழை எதுவும் வரக்கூடாது என்று வேண்டிக்கொள்வார். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் சிறி சிறு சம்பவங்களை கூட என்னுடைய அம்மாவிடம் சொல்லி தான் தலைவர் கலைஞரிடம் சொல்ல சொல்லுவேன். இன்றைக்கு அவர்கள் வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுர இல்லத்தில் ஓய்வில் இருக்கிறார்கள். நான் போய் அவர்களை பார்க்கும்போது அவரின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணையானது வேறு எதுவும் இல்லை.

அதேபோல தான் என் மனைவி துர்காவும், என்னுடைய பாதி என்று சொல்லும் அளவுக்கு என்னுடன் இருக்கிறார், திருமணம் ஆகி 5மாதத்தில் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறை சென்றபோது அவர் மிகவும் வருந்தினார், பிறகு பொது வாழ்வில் இவையெல்லாம் இயல்பு என்று தெரிந்து பக்குவப்படுத்திக்கொண்டார். என் வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் அப்போதெல்லாம் எனக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய மனைவி துர்கா அவர்கள் தான் என்று கூறினார்.

பிறகு தன்னையுடைய மகள் செந்தாமரை குறித்து பேசிய முதல்வர், அன்பின் வடிவம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், நான் எந்த பொறுப்பில் இருந்தாலும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர், ஒரு அரசியல்வாதியின் மகள் என்ற சாயம் தன் மீது விழுந்துவிடக்கூடாது என்று அதில் எப்போதும் உஷாராக இருப்பார், சுயமாக வரவேண்டும் எண்டு நினைப்பவர், அந்த வகையில் நான் மிகவும் கொடுத்து வெச்சவன், கருணை மிகுந்த தாய், தூணாக விளங்கும் மனைவி, தன்னம்பிக்கை கொண்ட மகள் இந்த மூன்றும் எனக்கு கிடைத்திருக்கு, இதே மாதிரியானவர்காள் தான் நீங்கள் (மகளிர்) அனைவரும் என்று கூறினார்.

Kathir

Next Post

கள்ளக்காதலியின் மீது இருந்த அளவு கடந்த மோகத்தால் நண்பனையே படுகொலை செய்த கள்ளக்காதலன்....!

Fri Sep 15 , 2023
பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் தான், அருள்ராஜின் வீட்டிற்கு அவருடைய நண்பரான தங்கவேல் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, அருள்ராஜின் மனைவிக்கும், தங்கவேலுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்து உள்ளது. […]

You May Like