சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடிகையாக வலம் வரக்கூடிய ஷீலா ராஜ்குமார் தனது திருமண உறவில் இருந்து பிரிவதாக தெரிவித்துள்ளார். நடிகை ஷீலா பரதநாட்டிய கலைஞராவார். ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பான சில குறும்படங்களில் இவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பிறகு ‘சினம்’, ‘டூலெட்’ போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான ‘திரௌபதி’ படத்தில் இவர்தான் கதாநாயகியாக நடித்திருப்பார்.
பின்னர், ‘மண்டேலா’, மலையாளத்தில் ‘கும்பலங்கி நைட்ஸ்’ சமீபத்தில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் ஷீலா. இந்நிலையில், இவர் தனது எக்ஸ் தளத்தில் தனது கணவர் சோழனை டேக் செய்து திருமண உறவில் இருந்து விலகுவதாக தெரிவித்து அன்பும் நன்றியும் என ட்வீட் செய்துள்ளார்.
அதில், ‘வாழ்வின் இந்தத் தருணத்தையும் கடந்து வருவேன்’ எனக் கூறியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ஷீலாவுக்கும். சோழனுக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. சோழன் கூத்துப்பட்டறை பயிற்சியாளர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்பது பற்றி ஷீலா எதுவும் குறிப்பிடவில்லை.