fbpx

நடிகர் மன்சூர் அலிகான்னுடன் படம் நடிக்க மாட்டேன்… நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார் ‌

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை. மேலும் நடிகை த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில்; நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

செம அறிவிப்பு..! ஐந்து ஆண்டுகளுக்கு இதற்கான அனுமதி செல்லும்...! தமிழக அரசு அதிரடி..!

Sun Nov 19 , 2023
தமிழ்நாட்டில் அனைத்து சொந்த உபயோக கார்களையும் டாக்சிகளாக மாற்றலாம். சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட (வெள்ளை நம்பர் பிளேட் கொண்ட) கார்களை வணிக வாகனங்களாக மாற்ற மாநில அரசு அனுமதித்துள்ளது. தங்கள் வாகனங்களை டாக்சிகளாகப் பயன்படுத்தத் தயாராக இருக்கும் கார் உரிமையாளர்கள், அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) அனுமதியைப் பெறலாம், இருக்கைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து ரூ. 625 முதல் 1,150 வரை செலுத்தி சமர்ப்பிக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இதற்கான அனுமதி […]

You May Like