fbpx

’ஒன்னும் பண்ண மாட்டேன் வீட்டுக்கு வாங்க’..!! எதிர்ப்பையும் மீறி திருமணம்..!! ஆணவக் கொலை செய்த தந்தை..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கரண் ரமேஷ் (22). இவர் மும்பையைச் சேர்ந்த குல்னாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், இருவருமே திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரும், மும்பைக்கு குடி பெயர்ந்தனர்.

இந்நிலையில், தனது மகள் வேறு மதத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டதால், தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இதனால், இருவரையும் கொலை செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி நைசாக பேசி மகள் குல்னாஸ் மற்றும் மருமகனை வீட்டீற்கு வரவழைத்துள்ளனர். அப்போது பெண்ணின் தந்தை மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து இருவரையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து, இருவரின் உடலை வெவ்வேறு இடத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், அவர்களது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறுதியில் தனது மகள் மற்றும் மருமகனை பெண்ணின் தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. பெற்ற மகளையும், மருமகனையும் ஆணவக் கொலை செய்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chella

Next Post

மீண்டும் புழக்கத்திற்கு வருகிறதா ரூ.1000 நோட்டு..? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு..!! உண்மை என்ன..?

Fri Oct 20 , 2023
ரூபாய் நோட்டுகள் தொடர்பாக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, திடீரென ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இந்நிலையில், நாட்டில் மீண்டும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்திற்கு வர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. சமீபத்தில் தான் ரூ.2000 […]

You May Like