fbpx

எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளிக்கும் நடவடிக்கைகளை நமது விமானப்படை மேற்கொண்டு வருகிறது…..! குடியரசு தலைவர் பெருமிதம்….!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே துண்டிகலில் இருக்கின்ற இந்திய விமானப்படை அகாடமியின் ஒருங்கிணைந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விமான படையின் அணிவகுப்பை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர், 1948, 1965, 1971 உள்ளிட்ட ஆண்டுகளில் நம்முடைய எதிரி நாடுகளுடன் ஏற்பட்ட போர்களில் நாட்டை காப்பதற்காக இந்திய விமானப்படையின் துணிச்சல் மிக்க வீரர்கள் பெரும்பங்காற்றி இருக்கிறார்கள். அது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. கார்கில் போரின் போதும் பாலாக்கோட்டின் பயங்கரவாதிகளின் முகாமிடத்தை அழித்தபோதும் அதே உறுதியையும், திறனையும் இந்திய விமானப்படை வெளிப்படுத்தி இருந்தது என்று தெரிவித்திருந்தார்.

அதோடு மனிதாபிமான உதவிகளையும் பேரிடர் நிவாரண பணிகளையும் இந்திய விமானப்படை செய்து வருகிறது. சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் உண்டாகி அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளையும் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளையும் மோசமான வானிலை மத்தியிலும் நம்முடைய விமானப்படை செய்தது. அதற்கு முன் ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் சிக்கி தவித்த 600க்கும் மேற்பட்ட இந்தியர்களையும் மற்ற நாட்டினரையும் பத்திரமாக மீட்டது நம்முடைய விமானப்ப டை. சாதகமற்ற சூழலில் பறப்பது, தரை இறங்குவது உள்ளிட்டவை நம்முடைய விமானப்படையின் உயர் திறன்களுக்கு சான்றாக காணப்படுகிறது.

வருங்கால போர்க்களத்தில் உயர் தொழில்நுட்பபோரை எதிர்கொள்வதில் இருக்கின்ற சவால்கள் உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நம்முடைய விமானப்படை எப்போதும் தயாராக இருக்க நடவடிக்கையின் மேற்கொண்டு வருகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி ஆர் சவுத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Next Post

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே…..! திருமணமான 5 மாதங்களில் இளம் பெண் தற்கொலை காரணம் என்ன….?

Sat Jun 17 , 2023
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அத்திப்பேடு காலனியில் வசிப்பவர் மோசஸ் (25). இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை ரவி மற்றும் தாய் மலர் உள்ளிட்டவருடன் வசித்து வருகிறார் மோசஸ் சென்ற 5 மதத்திற்கு முன்னர் முதல் பகுதியைச் சேர்ந்த எஸ்தர் (21) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இந்த நிலையில், எஸ்தர் […]

You May Like