தமிழக தலைமைச் செயலாளர் சிவராஜ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில் உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரிஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
நுகர் பொருள் மாணிக்க கழக இயக்குனராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டிருக்கிறார். நுகர் பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனராக இருந்த பிரபாகர் தாஸ், சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கால்நடை பராமரிப்பு , மீன்வளம் மற்றும் பால்வளத்துறை கூடுதல் செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இணை மேலாண் இயக்குனராக விஷு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு விழா குறித்த நிகழ்சிகளை மேற்பார்வை செய்வதற்கு தனி அதிகாரியாக சுப்பையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் நீதித்துறை துணை ஆணையராக ஆனந்த் மோகன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.