ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த 2017ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி தொடர் பைனலில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் சாம்பியன் டிராபி தொடர் நடத்தப்படவில்லை. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் பங்கேற்றுள்ளன. இவை தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில்மோதுகின்றன. ஏ பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசமும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலாஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்லமறுத்துவிட்டது. இதனால் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. லீக், அரையிறுதி, பைனல் என மொத்தம் 15 போட்டிகள் நடைபெறுகிறது.
இந்தநிலையில், நடப்பாண்டு தொடரின் முதல் ஆட்டம் கராச்சியில் நடைபெறுகிறது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முகமதுரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி அண்மையில் முத்தரப்பு தொடரில் 2 முறை நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த நிலையில் அதில் இருந்து மீண்டு வெற்றியுடன் தொடக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இருப்பினும், ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பான இந்தியா – பாகிஸ்தான் போட்டி, பிப்ரவரி 23 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. தொ டரின் அனை த்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போ ர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் இலவசமாக பார்க்ககலாம்.