fbpx

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்!… புறக்கணித்தால் பாகிஸ்தான் நீக்கம்!… வேறு அணிக்கு வாய்ப்பு!… ஐசிசி அதிரடி முடிவு!

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், பிளான்-B-யில் வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர் 2011க்கு பிறகு, இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பையில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன. மற்ற இரண்டு அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவதால், பாகிஸ்தான் அணிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாக். அரசு அனுமதி அளித்தால் மட்டுமே அந்த அணி இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும், இல்லாவிடில் உலகக்கோப்பையை புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை புறக்கணிக்க முடிவு செய்தால், ஐசிசி (பிளான்-B) வேறு முடிவுக்கு தயாராகி விட்டது. அதாவது பாகிஸ்தான் அணி பங்கேற்காவிட்டால், அந்த அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு வேறு அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் இருந்து ஒரு அணிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி, கடைசியாக 2016இல் இந்தியாவில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரருக்காக, இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய AI தொழில்நுட்பம் உருவாக்கம்!... கூகுளின் திட்டம் என்ன?

Fri Jun 30 , 2023
கூகுளின் முன்னணி AI நிறுவனம் டீப் மைண்ட் சாட் ஜிபிடிக்கு போட்டியாக புதிய AI தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் ஆகும். மனிதர்களால் செய்யமுடியாத செயல்களை கூட இந்த தொழில்நுட்பத்தின் மூலம் செய்யமுடியும். இதனால் கல்வி, விவசாயம் உள்ளிட்ட […]
கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3,500 செம்மறி ஆடுகள்..! ஆம் உண்மைதான்..! ஏன் தெரியுமா?

You May Like