Ice cream: ஐஸ்கிரீம் என்று நினைத்தவுடன் வாயில் தொடங்கி வயிறுவரை குளிர்ந்துபோனதுபோன்ற உணர்வு. அதிலும் இந்தக் கோடை வெப்பத்தில் ஜில்லென்று எதாவது சாப்பிடலாமா என்று மனசும் உடலும் அலைபாயும். கோடை காலம் வந்தாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும் இது சுவையாகவும் இருக்கும்.
இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சாப்பிட்டாலும் ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. ஆனால் கடையில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை அடிக்கடி வாங்கி சாப்பிடுவதில் தனி உணர்வு இருக்கும். இருப்பினும் கடைகளில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்களில் கொழுப்புகள் அதிகம் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. இதனால் பல்வேறு அசௌகரியங்கள், பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்தநிலையில், ரோஸ் மில்க், ஐஸ்கிரீம், பழரசங்களுடன் சேர்ந்த ஐஸ்கிரீம் ஆகியவை உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல. என்றாவது ஒரு நாள் ஆசைக்காக சிறிதளவு சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால், தொண்டை வலி, சளி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இவை சாதாரணமானவை என, அலட்சியப்படுத்தக் கூடாது. தொண்டை வலி ஏற்பட்டு அலட்சியப்படுத்தினால், ‘ருமாட்டிக்’ காய்ச்சல் ஏற்படும். இது, இதயம், மூட்டுகள், தோல் மற்றும் மூளையை பாதிக்கக்கூடிய நோயாகும்.
உடனடியாக சிகிச்சை பெறாத குழந்தைகளுக்கு, இதய பாதிப்புடன், சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். எனவே, கோடைகாலம் தான் என குழந்தைகளை, ரோஸ் மில்க், ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிட பெற்றோர் அனுமதிக்காதீர். அவ்வாறு சாப்பிடும் குழந்தைகளுக்கு, லேசான தொண்டை வலி வந்தாலும் அலட்சியப்படுத்தாமல், டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
Readmore: சுங்கச் சாவடிகளில் VIP-களும் கட்டணம் செலுத்த வேண்டும்…! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!