மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.
சென்னையில் கடந்த 15-ம் தேதி, மின் வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.. மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.. மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் அரசு துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது..
ஆனால் அதே நேரத்தில், தெருவிளக்கு, குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவை வழங்கும் துறைகளுக்கு 7 நாள்களுக்குள் மின் கட்டணம் செலுத்த நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்யவும் மின் வாரியம் உத்தரவிட்டது..