fbpx

அதை நிரூபிக்கவில்லை எனில் நிதியமைச்சர் பிடிஆர் அரசியலில் இருந்து விலகுவாரா.? செல்லூர் ராஜு சவால்..

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் நிரூபிக்கவில்லை எனில் அரசியலில் இருந்து விலகுவாரா என்று செல்லூ ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்..

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அதிமுக ஆட்சியில் விதிகளை மீறி பலருக்கு ஓய்வூதியம் வழங்கியதாக, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு “ திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பலருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது என்று சட்டமன்றத்திலேயே பலமுறை குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்கள்.. அப்போது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாங்காய் பறிக்க சென்றிருந்தாரா.?

உரியவர்களுக்கு தானே உதவித்தொகை வழங்கப்பட்டது..? அது என்ன அமைச்சர்களாக பார்த்து கொடுப்பதா..? அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்து ஓய்வூதியம், உதவித்தொகை அகியவை முறைப்படி வழங்கப்பட்டது. கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்துள்ளது என்று நிதியமைச்சர் பிடிஆர் கூறியுள்ளார்.. இதை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்.. ஆனால் நிரூபிக்கவில்லை எனில் நிதியமைச்சர் பிடிஆர் அரசியலில் இருந்து விலக தயாரா..?” என்று சவால் விடுத்தார்..

தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜு “ எந்த அடிப்படையில் கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி முறைகேடு என்று அமைச்சர் கூறுகிறார்..? துறையில் இருக்கும் பதிவாளர்களை கேட்டாரா.? எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார்..? தகுதியே இல்லாத ஒருவரை நிதி அமைச்சராக நியமித்து திமுக அரசு வரிகளை உயர்த்தி மக்களை பாடுப்படுத்தி வருகிறது… திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு வந்ததற்கு காரணமே நிதி அமைச்சர் தான்..” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

டெல்லியில் பரபரப்பு..‌! 12 வயது சிறுவனை 4 பேர் பலாத்காரம்...! மகளிர் ஆணையம் நோட்டீஸ்...!

Mon Sep 26 , 2022
டெல்லியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்து, “டெல்லியில் சிறுவர்கள் கூட பாதுகாப்பாக இல்லை” என்று கூறியுள்ளார். பெண்கள் ஆணையம் இந்த சம்பவத்தை அறிந்து டெல்லி போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது என்று ஸ்வாதி பாலிவால் கூறினார். டெல்லியில் பெண்கள் ஒருபுறம் இருக்க, ஆண் குழந்தைகளுக்கு […]

You May Like