நான் ஒரு முறையாவது கங்கனாவை சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும் போது அவரை இரண்டு முறையாவது கன்னத்தில் அறைவேன்” பாகிஸ்தானின் பிரபல நடிகை ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.
கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகை சேர்ந்த சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவர். நெப்போட்டிஸம் குறித்து எழுந்த பிரச்சனைகள், ஒரு பிரபல நடிகரின் தற்கொலை குறித்து எழுந்த பிரச்சனை என பல விஷயங்கள் குறித்த கருத்துக்களை கூறி அடிக்கடி ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம். சமீபத்தில் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக பேசி பலரிடம் வசைப்பாட்டு வாங்கினார். இவர் ஒரு நேர்காணலில் பாகிஸ்தான் ராணுவம் குறித்து கேலிக்குறிய வகையில் சில கருத்துகளை பேசினார். இது அந்த நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
கங்கனா ரனாவத் பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசியதற்கு அந்நாட்டு நடிகை ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர், “நான் ஒரு முறையாவது கங்கனாவை சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும் போது அவரை இரண்டு முறையாவது கன்னத்தில் அறைவேன்” என்று கூறினார். மேலும் கங்கனாவிற்கு தங்கள் நாட்டை பற்றியோ அல்லது தங்களின் ராணுவம் பற்றியோ பேச எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாட்டை பற்றி எதற்காக பேச வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களை மட்டும் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகளை முதலில் கவனியுங்கள்” என்று கூறியுள்ளார்.
வைரலாக பேசப்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே தனது சமூக வலைதள பக்கங்களில் அது குறித்து பேசிவிடுவார். ஆனால், பாகிஸ்தான் நடிகை “கன்னத்தில் அறைவேன்” என்று பேசியுள்ளதற்கு இன்றளவும் அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார்.