ஜாக்கிசான் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஒரு கால கட்டத்தில் அவர் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட்ட நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ஜாக்கிசான் நடித்த ‘தி லெஜண்ட்/மித்2’ என்ற ஆங்கில படம், தமிழில் ‘விஜயபுரி வீரன்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
கதைப்படி, தொல்பொருள் ஆராய்ச்சியாளரான ஜாக்கிசானுக்கு அவ்வப்போது ஒரு கனவு வருகிறது. அதில், அவர் போர் வீரனாக வருகிறார். தனது தாய்நாட்டுக்காக போராடுகிறார். நிகழ்காலத்தில், கனவில் வருபவர்கள் வருகிறார்கள். வெவ்வேறு தொழில் செய்யபவர்களாக வருகிறார்கள். அந்த கதைக்கும், இப்போதைய கால கட்டத்திற்கும் என்ன தொடர்பு. ஒரு ரகசிய இடத்தில் இருக்கும் தங்கப்புதையலை யார் கண்டுபிடித்தார்கள் என்பது கிளைமாக்ஸ்.
போர்கள காட்சிகள், நட்பு, ஒரு பனி மலையில் நடக்கும் கிளைமாக்ஸ் ஆகியவை விஜயபுரி வீரனை ரசிக்க வைக்கிறது. பல காட்சிகள் எம்ஜிஆர் படங்களை பார்ப்பது போல இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழில் விஸ்வாஸ் சுந்தர் இந்த படத்தை வெளியிடுகிறார். விஜயபுரி வீரன் படத்தில் இளம் வயது ஜாக்கிசான் தோற்றம் ஏ.ஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்து ஜாக்கிசான் பேசியதை தமிழில் டப் செய்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில், மறுபிறவி இருந்தால் நான் சூப்பர் மேன் ஆக வேண்டும். அன்மையும், அமைதியையும் உலகம் முழுக்க என்னால் பரப்ப முடியும். கண்டிப்பா அனைவரும் தியேட்டருக்கு சென்று படத்தை பாருங்கள். ஜாலியா என்ஜாய் பண்ணுங்க” என்று பேசியுள்ளார்.