காட்பாடியில், அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 வருடங்களுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், தன்னுடைய மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் நீண்ட நேரம் காத்துக்கொண்டு நின்றிருந்தார். மின் இணைப்பு திரும்ப வராததால் எரிச்சலான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பிறகு, அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார்.
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிக்கொண்டு இருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இரண்டு பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் மற்றும் கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.