விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. தினம் தினம் புது புது காரணங்களுக்காக போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இந்த முறை இரண்டு வீடுகள் என்பதால் இருபிரிவினராகவே போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் வீட்டு தலைவரை குறைவாக கவர்ந்த போட்டியாளர்களை இரண்டாவது வீடான ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பெரிய வீட்டில் இருப்பவர்கள் என்ன சமையல் செய்ய வேண்டுமோ, அதன் பெயர்களை எழுதிக் கொடுக்கின்றனர். ஆனால், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் தங்களால் சமைக்க முடியாது என்று சொன்னதால் பெரிய வீட்டில் இருப்பவர்கள் அங்கு இருக்கும் உணவுப் பொருட்களை எடுத்து வந்து விடுகின்றனர். இதனால் இருவீட்டாருக்கும் இடையில் மோதல் வெடிக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.